சினிமா

மீண்டும் அப்பாவான பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி! – வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்

மீண்டும் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அப்பாவான செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ். இந்த ஷோவில் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்தவர் தான் நடிகர் ஆரி. நடிகர் ஆரி மாலைப்பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் ஆரி தற்போது ஒரு நற்செய்தியை பகிர்ந்துள்ளார். அதில், தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், அவர் வீட்டிற்கு குட்டி பிரின்ஸ் வந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள் நடிகர் ஆரிக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

Back to top button