சினிமா

சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனை… நிம்மதி இல்லாமல் அல்லோலப்படும் ரஜினிகாந்த்!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் வீட்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரச்சினைகள் வெடித்து கொண்டிருக்கின்றது.

கோலிவுட் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த நடிகர்களில் ரஜினியும் ஒருவர். இவர் நடிப்பில் வெளியான “ஜெயிலர்” திரைப்படம் ஒரு கம்பேக்காக இருந்தது.

இவ்வளவு பெயரும் புகழும் இருக்கும் ரஜினியின் வீட்டில் ஒரு நிம்மதியில்லை என அவர் ஒரு பேட்டியில் ஓபனாக பேசியிருக்கிறார். இதனை கேட்டு அங்குள்ளவர்கள் ஒரு நிமிடம் ஷாக்காகியுள்ளனர். சமீபக்கால ரஜினிகாந்தின் மகள்கள் பிரச்சினை செய்து கொண்டிருந்தனர். அதில் மூத்த மகள் விவாகரத்து வாங்கிக் கொண்டு தற்போது ரஜினியுடன் வாழ்ந்து வருகிறார்.

இளைய மகள் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு மீண்டும் ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது ரஜினிக்கு ஒரு நிம்மதி கிடைக்கும் என நினைக்கும் பொழுது அடுத்த பிரச்சினையை அவரது மனைவி ஆரம்பித்துள்ளார்.

மோசடி வழக்கு:
லதா ரஜினிகாந்த் மீது மோசடி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி பாரிய செலவில் எடுக்கப்பட்ட “கோச்சடையான்” திரைப்படம் எடுக்கப்பட்டது.

இந்த திரைப்படம் நினைத்த அளவு வெற்றிப் பெறாத நிலையில் வழக்கு லதா ரஜினிகாந்த் பக்கம் திரும்பியுள்ளது.

இந்தப் படத்தின் தயாரிப்பிற்காக“ மீடியா ஒன் என்டர்டெயின்மென்ட் ” என்ற நிறுவனத்தைச் சேர்ந்த முரளி என்பவர் ஆறு கோடி ரூபாயை “ ஆட் பியூரோ” என்ற நிறுவனத்திடம் இருந்து பெற்று இருக்கிறார்.

இதற்கு முழு பொறுப்பையும் வதா ரஜினிகாந்த் ஏற்றுக் கொண்டு கையெழுத்து போட்டுக் கொடுத்துள்ளார். முரளி என்பவர் பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்துள்ளார். இதனால் லதா ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெளியான தீர்ப்பு:
இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு லதா ரஜினிகாந்த் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் போலி ஆவணம், தவறான அறிக்கையை சமர்ப்பித்தல் போன்ற குற்ற எண்களில் லதா ரஜினிகாந்த்தை கர்நாடகா நீதிமன்றம் விசாரிக்கலாம் என அனுமதி வழங்கி விட்டது.

இதனால் லதா ரஜினிகாந்த் மீது விசாரணை இடம்பெற்று வருகின்றது. மகள்கள் கொடுத்த பிரச்சினை போதாமல் தற்போது மனைவியும் பிரச்சினை கொடுப்பதால் அதிக மன அழுத்தத்தில் ரஜினிகாந்த் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

Back to top button