சினிமா
நடிகர் அமிதாப் பச்சன் குடும்பத்தில் இருந்து மற்றொரு ஹீரோ.. அச்சு அசலாக அபிஷேக் பச்சன் போலவே இருக்கிறாரே

பிரபல நடிகர் அமிதாப் பச்சன் 70களில் தொடங்கி தற்போது வரை சினிமாவில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர். மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் அவர் 81 வயதிலும் படங்கள், டிவி நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனும் தற்போது ஹிந்தி சினிமாவில் முக்கிய நடிகர் தான். மருமகள் ஐஸ்வர்யா ராயும் முன்னணி நடிகை தான். தற்போது அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா பச்சனின் மகன் அகஸ்தியா நந்தா சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். The Archies என்ற படத்தில் தான் அவர் நடித்து இருக்கிறார். நேற்று இந்த படத்தின் பிரிமியர் நடைபெற்ற நிலையில் ஒட்டுமொத்த பச்சன் குடும்பமும் அதில் கலந்துகொண்டது. அகஸ்தியா நந்தாவின் போட்டோ, இளம் வயது அபிஷேக் பச்சன் உடன் ஒத்து போவதாக தற்போது நெட்டிசன்கள் போட்டோவுடன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
