சினிமா

நடிகர் ரோபோ சங்கர் குடிப்பழக்கத்திற்கு அதிகம் அடிமையாகி இருந்தார்… அப்பாவுக்கு மகள் கொடுத்த அறிவுரை!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் குடிப்பழக்கத்திற்கு அதிகம் அடிமையாகி தற்போது அதிலிருந்து மீண்டு வருதாகவும் அவரது மகள் இந்திரஜா தெரிவித்திருக்கிறார். நகைச்சுவை நடிகராக பிரபலமான ரோபோ சங்கர் முதலில் மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பின் கலக்கபோவது யாரு, அசத்தப் போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் பல குரலில் பேசி அசத்தியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதற்குப் பின்னர் தான் சினிமாவிலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அடுத்தடுத்து வாய்ப்புகள் வர பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார். தொடர்ந்தும், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, மாரி, விஸ்வாசம், வேலைக்காரன், பிகில் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

இந்நிலையில், ரோபோ சங்கர் சில காலம் திரையில் காணாமல் போயிருந்தார். அவர் பற்றி தேடும் போது தான் கொளு கொளுவென கொஞ்சம் அதிக எடையுடன் இருந்த இவர் திடீரென எடைக் குறைந்து அடையளம் தெரியாத அளவில் மாறிவிட்டார்.

இதற்குக் காரணம் உடல் எடையை குறைப்பதற்காக டயட்டில் இருந்த போது மஞ்சள் காமாளை நோய் வந்து உடல் எடை இன்னும் குறைந்து விட்டது. இதனால் அவர் பெரும்பாடும் பாடுபட்டு நோயிலிருந்து மீண்டதாகவும் அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும், தற்போது அவரின் மகள் இந்திரஜா பேட்டியொன்றில் ரோபோ சங்கர் பற்றி பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருந்தது,

மேலும், அப்பா கடந்த சில மாதங்களாக குடிப்பழக்கத்திற்கு அதிகம் அடிமையாகி அதனால் அவரது உடல் நிலை அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்தப் பழக்கத்தை நிறுத்தி அதிலிருந்து மீண்டு புது வாழ்க்கையை வாழ ஆரம்பித்திருக்கிறார்.இந்த பழக்கங்கள் எல்லாம் இன்றைய இளம் தலைமுறையினரை அதிகம் பாதிக்கிறது. அதனால் இதனை முழுவதுமாக தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

Back to top button