சினிமா

சென்னை கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கியுள்ள நடிகர் சூர்யா- அவரே வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு

சினிமா, விளையாட்டு முக்கியமாக கிரிக்கெட் தான் இந்தியாவில் உள்ள இளைஞர்களின் கவனம் அதிகம் உள்ளது. எனவே கிரிக்கெட் போட்டியில் ஐபிஎல், பிபிஎல் போன்ற கிரிக்கெட் தொடர்கள் மூலம் டி20 போட்டிகள் அதிகம் பேமஸ் டி 20யை போல சமீப காலமாக டி10 தொடர்களும் உலகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. டி10 தொடர் இந்தியாவில் ஐஎஸ்பிஎல் என்கிற பெயரில் நடத்தப்பட இருக்கிறது. இதில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய 6 அணிகள் பங்குபெற உள்ளதாம்.

அடுத்த ஆண்டு மார்ச் 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த ஐஎஸ்பிஎல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் தான் வாங்கியுள்ளார்களாம். அதில் சென்னை அணியை நடிகர் சூர்யா தான் வாங்கியுள்ளாராம், இதனை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார அந்த வகையில் மும்பை அணியை அமிதாப் பச்சன் வாங்கிய நிலையில், பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்‌ஷய் குமாரும், ஐதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம்சரணும் வாங்கி இருக்கின்றனர்.

Back to top button