நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவது உறுதி! இன்னும் சற்று நேரத்தில் முக்கிய ஆலோசனை

நடிகர் விஜய் வருகிற சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்குவதற்காக ஆயத்தமாகி கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார் நடிகர் விஜய். மாவட்டம் வாரியாக தேர்வு செய்யாமல் தொகுதி வாரியாக தேர்வு செய்ததே விஜய்யின் அரசியலுக்கான அடித்தளம் என கூறப்பட்டது.
இதேவேளை, இன்று காலை 9 மணியளவில் 234 தொகுதிகளை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தவுள்ளார். இதற்கிடையே தற்போதைய படங்களை முடித்து கொடுத்துவிட்டு மூன்று ஆண்டுகளுக்கு சினிமாவில் இருந்து விஜய் பிரேக் எடுக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. இவை அனைத்துமே விஜய் சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவதற்கான அடுத்த அடுத்த நகர்வுகளே என பேசப்படுகிறது. பனையூர் இல்லத்தில் 234 சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் விஜய் இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், இதில் பல்வேறு முக்கிய மற்றும் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படலாம் எனவும் தெரிகிறது. ஆனால் இது அரசியலுக்கான காரணம் இல்லை என்றும், மாணவ- மாணவிகளுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி சிறப்பாக முடிந்ததால் அதற்கான பாராட்டே இதே எனவும் கூறப்படுகிறது.