நடிகர் விஜய் லியோ வெற்றி விழா முடிந்து 2ஆம் நாளே மருத்துவமனைக்கு சென்ற பின்னணி குறித்து வெளியான உண்மை!
நடிகர் விஜயை லியோ வெற்றி விழா முடிந்து 2ஆம் நாளே ரசிகர்கள் மருத்துவமனையில் கண்டுள்ளார்கள். தமிழ் சினிமாவில் மெஹா ஸ்டாராக இருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியாகியது. இந்த திரைப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள். விஜயின் 67 ஆவது திரைப்படம் என்பதால் மக்கள் மத்தியில் பாரியளவு வரவேற்பு இருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் லியோ திரைப்படத்திற்கான வெற்றி விழா ரசிகர்கள், பிரபலங்களுடன் கோலாகலமாக இடம்பெற்றது. விழா முடிந்து இரண்டாம் நடிகர் விஜய் முக கவசத்துடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனால் பதற்றமான ரசிகர்கள் ஏன் என தேடி பார்த்துள்ளனர்.
இதன் போது தான் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் உடல்நல குறைவால் மருத்துவமனையில் இருந்த செய்தி வெளியாகியிருக்கின்றது. விஜய் நேரில் சென்று நலம் விசாரித்து வந்துள்ளார். ரசிகர்களை வரவேற்பது, அவர்களை பத்திரமாக நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைப்பது, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது போன்ற பல வேலைகளை ஆனந்த் பார்த்து வருகிறார். இப்படியொரு நிலையில் அவர் உடல்நல குறைவால் இருப்பது விஜய் ரசிகர்களை பெரிதும் பாதித்துள்ளது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் கருத்துக்களில் நலம் விசாரித்து வருகிறார்கள்.