நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் பிறந்த நாளில் இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

நடிகர் விஜய்யின் மூத்த மகன் ஜேசன் சஞ்சய்யின் பிறந்த நாளான இன்று அவரின் சில புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் எப்போதும் ஆடம்பரம் இல்லாத எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருபவர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர் தான் இலங்கையைச் சேர்ந்த சங்கீதா. விஜய்- சங்கீதா தம்பதிகளுக்கு திவ்யா சாஷா மற்றும் ஜேசன் சஞ்சய் என இரு குழந்தைகள் இருக்கிறார்கள். விஜய் நடிப்பில் கடைசியாக வாரிசு திரைப்படம் வெளியாகி சூப்பராக ஓடி அதிக வசூலைப் பெற்றிருந்தது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.








இந்நிலையில், விஜய்யின் மூத்த மகன் ஜேசன் சஞ்சய் தனது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். இவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இவர் லண்டனில் தனது படிப்பை முடித்து விட்டு தனது நண்பர்களுடன் குறும்படங்களை இயக்கி வருகிறார். மேலும், தற்போது இவர் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டுள்ள சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.