நடிகை ஜோதிகா குடும்பத்தை பிரித்தாரா? மேடையில் கண்கலங்கி உண்மையை கூறிய சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் சூர்யா தனது மனைவி குறித்து கண்கலங்கிய படி பல தகவல்களை கூறியுள்ளார். நடிகர் சூர்யா நேருக்கு நேர் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்த நடிகர் சூர்யா, பல வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். சமீபத்தில் இவர் ஜெய் பீம் படம் பயங்கர வெற்றியை பெற்றதோடு, தேசிய விருதையும் பெற்றது. மேலும் விகடன் விருதுவிழாவில் இப்படத்திற்கு 5க்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சூர்யா, ஜோதிகாவை பற்றி நெகிழ்ச்சியடைந்து பேசியிருக்கிறார். இந்த விருதை தனது மனைவி ஜோதிகாவிற்காக அர்பணிக்கிறேன் என்றும் ஜோதிகா தனக்காக நிறைய தியாங்கங்களை செய்திருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார். என்னை நடிக்க வைத்துவிட்டு சினிமாவில் இருந்து விலகி குழந்தைகளை கவனித்துக்கொண்டார்.
எப்போது எனக்கு ஆதரவாக இருந்து வருகிறார் என்றும் என் வாழ்க்கையில் நடக்கும் அனைத்திலும் ஜோதிகாவின் பங்கு இருப்பதாகவும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். ஏற்கனவே பெற்றோரிடம் இருந்து ஜோதிகா சூர்யாவை பிரித்துவிட்டார் என்ற தகவல்கள் பரவிய நிலையில் சூர்யா பேசியது அதையெல்லாம் சுக்கு நூறாக்கியுள்ளது.