பிக்பாஸ் சீசன் 7 தமிழ் விரைவில் ஆரம்பம்! பங்குபற்றும் 5 பிரபலங்களின் விபரம் இதோ

தமிழகத்தின் பிரபல ரிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் சீசன் 7ல் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களில் ஆடிஷன் சென்ற 5 போட்டியாளர்களின் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ரிவியில் பிக்பாஸ் சீசன் 6 முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் ஏழாவது சீசன் ஆரம்பமாக உள்ளது. இந்த ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. இந்நிலையில் சீசன் 7 வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாக தகவல் சமீபத்தில் வெளியானது. இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் போட்டியாளர்களின் தேர்வும் ஆரம்பமாகியுள்ளதாம். அந்த வகையில் இந்நிகழ்ச்சிக்கான ஆடிஷனில் சில பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
குணச்சித்திர நடிகை, சர்ச்சை பிரபலம் ரேகா நாயர்
பிரபல நடிகை உமா ரியாஸ்
தொகுப்பாளினி பாவனா
தொகுப்பாளர் மா கா பா
குக் வித் கோமாளி சரண்
போன்றோர் ஆடிஷனில் கலந்து கொண்டுள்ளதாகவும், இன்னும் மற்ற போட்டியாளர்கள் யார் என்ற விபரம் தெரியாத நிலையில் ரசிகர்கள் தனது யூகத்தின் அடிப்படையில் பெயர்களை அடுக்கி வருகின்றனர்.