விஜய் மகனின் முதல் படத்தில் நடிக்க விஜய் சேதுபதி மறுத்து விட்டாரா? பிக்பாஸ் பிரபலத்தை ஹீரோவாக்கும் சஞ்சய்!
விஜய் மகனுடன் இணைய போகும் முக்கிய பிரபலம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய்யின் மகன் தான் ஜெசன் சஞ்சய். இவர் சிறு வயது முதல் சங்கீதா விஜயின் குடும்ப வழியில் வளர்ந்து வருகின்றார். விஜயிற்கு சஞ்சய் மட்டுமல்ல இன்னொரு பெண் குழந்தையும் இருக்கிறார்.
இவர்கள் தற்போது லண்டனில் மேற் படிப்பு படித்து வரும் நிலையில் சஞ்சய் பற்றிய சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. சினிமாவில் ஹீரோவாக இருக்கும் விஜயின் மகன் கோலிவுட்டில் ஒரு இயக்குநராக காலடி எடுத்து வைக்கிறார்.
அந்தவகையில் படிப்பை முடித்த சஞ்சய் தற்போது தன்னுடைய முதல் திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் உதவியுடன் ஆரம்பிக்கிறார். இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க ஒரு பிரபலத்தை வலை வீசி தேடி வரும் நிலையில் பிக்பாஸ் பிரபலங்களான கவின் மற்றும் ஹரீஸ் கல்யாண் இருவரின் பெயர்கள் அடிப்பட்டு வருகின்றன.
அதில் ஹரீஸ் கல்யாண் நடிக்கவிருந்த “ஸ்டார்” திரைப்படத்தில் கவின் பெயர் அடிப்படுகின்றது. இதனால் நிச்சயம் ஹரீஷ் கல்யாணுக்கு ஒரு வாய்ப்பு இருக்கின்றது என ரசிகர்கள் முனுமுனுத்து வருகின்றார்கள். அத்துடன் விஜய் சேதுபதியை வைத்து தான் படம் எடுப்பேன் என கூறிய சஞ்சய் இப்போது ஹீரோ தேடுகிறார் என்றால் அப்போது விஜய் சேதுபதி மறுத்து விட்டாரா? இப்படி ரசிகர்கள் மத்தியில் பல கதைகள் ஓடிக் கொண்டிருக்கின்றது.