80களில் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வந்த நடிகர் உணவு டெலிவரி செய்கிறாரா? காட்டுத்தீயாய் பரவும் புகைப்படம்

80களில் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வந்த நடிகர் மோகன் உணவு டெலிவரி கொடுக்கும் கம்பெனியின் ஆடையணிந்து வனிதாவுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்களால் செல்லமாக மைக் மோகன் என்று அழைக்கப்படும் இவரது படத்தின் பாடல்கள் அனைத்தும் தற்போது ரசிகர்கள் வாயில் முனுமுனுத்த வண்ணமாகவே இருப்பார்கள். சினிமாவிலிருந்து ஒதுங்கிய நடிகர் மோகன் பல ஆண்டுகளுக்கு பின்பு தற்போது ஹரா என்ற படத்தில் நடித்து வருகின்றார். விஜய் ஸ்ரீ இயக்கி வரும் இந்த படத்தில் வனிதா, யோகி பாபு, குஷ்பு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் வனிதா நடிகர் மோகன் உடன் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். வனிதா வெளியிட்ட புகைப்படத்தில் மோகன் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்ப்பவர் போன்று சொமட்டோ நிறுவனத்தின் டிசர்ட்டில் காணப்படுகின்றார். குறித்த புகைப்படத்தினை வெளியிட்டு வனிதா கூறுகையில், தனது கனவு நனவாகிவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் நடிகர் மோகன் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்கின்றாரா என்றும் வனிதாவின் புதிய கணவர் உணவு டெலிவரி செய்பவரா? என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.