சிறப்பாக இடம்பெற்ற அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் திருமணம்! வைரலாகும் புகைப்படங்கள்

இயற்கை அழகுடன் கூடிய இடத்தில் சிம்பிளாக அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. சூது கவ்வும் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்து வித்தியாசமாக கதைகளை தெரிவு செய்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர்.

இவர் தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம், போர்த்தொழில் என சிலப் படங்களில் நடித்து திரையுலகில் வரவேற்பைப் பெற்றவர். கடந்த மாதங்களாக இவர் நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அதற்கு மறுப்புத் தெரிவிக்காமல் ஆம் என்று தெரிவித்தார்கள்.



மேலும், கீர்த்தி பாண்டியன் தும்பா என்ற திரைப்படத்தில் நடித்து சினிமாவிற்குள் வந்தார். இந்நிலையில், இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்து இருவீட்டார் சம்மதத்துடன் இன்று நெருங்கிய சொந்தங்களை அழைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் திருமணம் இந்து முறைப்படி இயற்கை அழகுடன் திருநெல்வேலி, பாளையற்கோட்டை அருகே உள்ள இட்டேரியில் நடந்து முடிந்துள்ளது.