சினிமா
நயன்தாராவை தொடர்ந்து ஹன்சிகாவின் திருமணமும் ஓடிடியில்!
நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் netflix ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளநிலையில் நடிகை ஹன்சிகாவின் திருமணமும் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை 2022 டிசம்பர் 4ஆம் திகதி திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள முண்டோடா கோட்டையில் நடந்தது.
இந்நிலையில், நடிகை ஹன்சிகாவின் திருமணம் ‘லவ் ஷாதி டிராமா’ என்ற தலைப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது.
இதனை ஹன்சிகா தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.