KPY தீனாவுக்கு திருமணம் – வெளியான புகைப்படங்கள்
![](https://tamilaran.com/wp-content/uploads/2023/06/Untitled-design-2023-06-01T152321.522-1-780x470.png)
கலக்கப்போவது யாரு எனும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானவர் தீனா. இவர் ஆரம்பத்தில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறிமுகமாகினார். அதன் பின்னர் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும் இடையில் தொலைபேசியில் அழைப்பெடுத்து பிரபலங்களை கலாய்ப்பதில் இவரை அடித்துக்கொள்ள ஆள் இல்லை.
![](https://tamilaran.com/wp-content/uploads/2023/06/23-64785c619c0ba.jpg)
அத்துடன், பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் காமெடி வேடங்களிலும் நடித்து வருகிறார். மேலும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் துணை இயக்குநராகவும் கடமையாற்றியவர். இவர் அண்மையில் தனது சொந்த ஊரில் பிரம்மாண்டமான வீடு ஒன்றை கட்டியுள்ளார். இதேவேளை, இன்று இவர் திருமண பந்தத்திலும் இணையவுள்ளார். இவரது சொந்த ஊரான திருவாரூரில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரையினைச் சேர்ந்த பலரும் இந்தத் திருமணத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
![](https://tamilaran.com/wp-content/uploads/2023/06/23-64785c6206064.jpg)
தீனா செய்துகொள்ள இருக்கும் குறித்த பெண், ஒரு க்ராபிக் டிசைனர் என்றும் கூறப்படுகிறது. இது பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் என்றும் ஊடகமொன்றில் தெரிவித்துள்ளார். இந்த திருமண செய்தியைக் கேட்டு, பல ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.