மறைந்த நடிகர் இதயம் முரளியின் மகளைப் பார்த்து இருக்கீங்களா? வைரலாகும் அரிய புகைப்படம்

மறைந்த நடிகர் இதயம் முரளியின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
இதயம் முரளி
90களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் தான் இதயம் முரளி. இவர் நடித்த படங்கள் எல்லாம் இன்று வரைக்கும் ரசிகர்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இவர் கன்னட இயக்குநர் சித்தலிங்கய்யாவின் மகனான முரளி, தன் தந்தையிடமே உதவி இயக்குநராகவும், உதவி படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்தார். கன்னட சினிமாவில் நடிகராக அறிமுகமாகி பூவிலங்கு என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதிலும் இவர் நடித்த பல திரைப்படங்களில் இவருக்கு பெரும் பெயரை வாங்கிக் கொடுத்த திரைப்படம் தான் இதயம் திரைப்படம். அதன்பின், முரளி ஷோபா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சோபா- முரளி தம்பதிகளுக்கு அதர்வா, ஆகாஷ் என்ற இரண்டு மகன்களும், காவியா என்ற ஒரு மகளும் இருக்கிறார்.
மேலும், முரளியின் மகன் அதர்வா கதாநாயகனாக நடித்த பானா காத்தாடி திரைப்படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதுவே அவரின் இறுதி படமாகவும் அமைந்தது.
நடிகர் முரளி 2010ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில், முரளியின் மகள் புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.



