சினிமா
பிறந்த நாள் அன்று இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பகிர்ந்துள்ள புகைப்படம்!

இன்று பிறந்தநாளை கொண்டாடும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில் அவர் “இன்று நான் என்னவாக இருக்கிறேன் என்பதற்கு இந்த நாளில் எனது பெற்றோருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். என் தந்தை எனக்கு இசையைக் கற்றுக் கொடுத்தார், என் அம்மா எனக்கு அன்பைக் காட்டவும் அடக்கமாகவும் இருக்க கற்றுக் கொடுத்தார்.” இது 2 வயதில் எடுத்த புகைப்படம் என்றும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தற்போது ஹாரிஸ் ஜெயராஜ் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் JR 30 படத்திற்கு இசையமைத்து வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது.
