நயன் – விக்கி தம்பதிகள் குழந்தைகளுடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் !

தங்கள் இரட்டை குழந்தைகளின் முதல் பிறந்தநாளில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி மகன்களின் புகைப்படங்களை பதிவிட்டுள்ள நிலையில், குழந்தைகளின் புகைப்படங்கள் சமூகவைத்தளங்களில் வரைரலாகி வருகின்றது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
குழந்தைகளின் பிறந்த நாள்
அதைத்தொடர்ந்து அவர்கள் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராநிலையில் ‘உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன்’ என பெயர் சூட்டியிருப்பதாக அறிவித்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக பண்டிகை நாட்களில் குழந்தைகளுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை இருவரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். எனினும் குழந்தைகளின் முகத்தை காட்டாமலேயே புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இரட்டை குழந்தைகளின் பிறந்தநாளையொட்டி குழந்தைகளின் முகம் தெரியும்படியான புகைப்படங்களை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி பகிர்ந்துள்ளனர்.
