சினிமா

ரஜினிகாந்த் எதிர்நீச்சல் திருச்செல்வமிடம் கோரிக்கை! என்ன தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த், ‘எதிர்நீச்சல்’ சீரியல் இயக்குநர் திருச்செல்வமிடம் கோரிக்கை வைத்த தகவல் வைரலாகி வருகிறது. சன்டிவியில் தினமும் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. டி.ஆர்.பி.யிலும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. மெகா ஹிட் கொடுத்த ‘கோலங்கள்’ என்ற தொடரை இயக்கிய திருச்செல்வம் தான் தற்போது ‘எதிர்நீச்சல்’ சீரியலையும் இயக்கி வருகிறார். இந்நிலையில், இயக்குநர் திருச்செல்வம் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவர் பேசுகையில், நடிகர் ரஜினிகாந்த் என்னிடம் நீங்கள் இனி சீரியல் இயக்குவதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று கூறியதாக தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகன் நான். நான் சன்டிவியில் ‘கோலங்கள்’ என்ற சீரியலை இயக்கினேன். இந்தச் சீரியல் முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ‘கோலங்கள்’ சீரியல் நடித்த நடராஜன் ரஜினி சாரிடம் நெருங்கிய நண்பர். அப்போது நடராஜன் என்னிடம் ரஜினி சார் உங்களுடைய ‘கோலங்கள்’ சீரியலை பார்க்கிறார் என்று சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோஷம் தாங்க முடியவில்லை. இதனையடுத்து, நடராஜன் சார் மூலமாக நான் ரஜினிகாந்த் சாரை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. நான் அவர் வீட்டிற்குச் சென்றேன். அப்போது, எனக்கு ரஜினிகாந்த்தை பார்க்கப்போறோம் என்ற சந்தோஷம் தாங்க முடியவில்லை. நிறைய பேர் இருப்பார்கள் என்று நினைத்துச் சென்ற எனக்கு, அங்கே நான் மட்டும் தான் இருந்தேன். வேறு யாரும் இல்லை. அப்போது ரஜினிகாந்த் என்னை வந்து சந்தித்தார். அவர் ரொம்ப என்னிடம் கேசுவலாக பேசினார். அப்போது, என்னிடம் எப்படி 1500க்கும் மேற்பட்ட எபிசோடை எடுத்தீங்க. இப்படி நல்ல திறமை இருக்கிற நீங்கள் சீரியலை இயக்குவதை விட்டுவிட்டு சினிமாவில் படத்தை இயக்க பாருங்கள் என்று கேட்டார். அது எனக்கு ஆச்சரியத்தையும், சந்தோஷத்தையும் கொடுத்தது. உங்களிடம் கதை இருக்கிறதா என்று கேட்டார். உடனே நான் கதை சொல்ல ஆரம்பித்தேன். அப்போது, அவர் என்னப்பா… எனக்கு கதை சொல்லச் சொன்னால், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையைச் சொல்கிறீர்களே என்று சிரித்தார். பின்னர், அவரிடம் போட்டோ எடுக்க வேண்டும் என்பதைக்கூட நான் மறந்துவிட்டேன். அவரே எனக்கு ஞாபகப்படுத்தி போட்டோ எடுத்துக்கலாமா என்று கேட்டார். உடனே எனக்கு குஷி. ஆனால், என் செல்போனில் கிளாரிட்டி இல்லை. உடனே அவர் கேமரா அரேஞ்ச் பண்ணி போட்டோ எடுத்து, அதை என் வீட்டிற்கு விலாசத்திற்கு அனுப்பி வைத்தார். தற்போது ரஜினிகாந்த் ‘எதிர்நீச்சல்’ சீரியலை பார்த்து வருவதாக ‘ஜெயிலர்’ படத்தில் நடித்த மாரிமுத்துவிடம் கூறியுள்ளார். அதைக் கேட்டு எனக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை என்றார்.

Back to top button