15 வயதை குறைத்து செம ஸ்டைலாக மாறி அழகில் ஜொலிக்கும் சிம்பு.. புகைப்படம் இதோ

தென்னிந்திய நடிகர் சிம்பு செம்ம ஸ்டைலாக மாறியுள்ள புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் சிம்பு, ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இவரின் திருமண செய்திக்காக ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். ஆனால் திருமணத்தை குறித்து வாய் திறக்காமல் இருக்கும் சிம்பு, பயங்கர பிஸியாக நடித்து வருகின்றார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்திற்காக வெளிநாடு சென்று தனது உடலை ஃபிட்டாக்கி வந்துள்ளார். சமீபத்தில் மலேசியாவில் நடந்த யுவனின் இசை நிகழ்ச்சியில் சிம்பு கலந்து கொண்ட சிம்புவின் புதிய லுக்கை அவதானித்த ரசிகர்கள் பயங்கர ஆச்சரியத்தில் காணப்படுகின்றனர்.

இக்குறித்த புகைப்படத்தில், சுமார் 15 வருடத்திற்கு முன்பு இருந்த சிம்பு போன்று காணப்படுகின்றார். தாடி மற்றும் கூலிங் கிளாஸ் உடன் ஸ்டைலிஷ் ஆக இருக்கும் சிம்புவை அவதானித்த ரசிகர்கள் ’எஸ்டிஆர் 48’ படம் வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்த்து வருகின்றனர். உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.