ரெயில் படியில் பயணம் செய்ததற்காக மன்னிப்புக் கேட்டார் சோனு சூட்
பாலிவுட் நடிகர் சோனுசூட் ரெயிலின் வாசலில் அமர்ந்து மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்வது போன்ற ஒரு வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
மும்பை ரெயில்வே போலீஸ் கமிஷனரும் இது தொடர்பாக நடிகர் சோனுசூட்டை எச்சரித்துள்ளார். இது மிகவும் ஆபத்தான பயணம் என்றும், இது போன்ற காரியத்தில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். படங்களில் வேண்டுமானால் ரெயிலின் வாசலில் அமர்ந்து பயணம் செய்யலாம். படம் நிஜ வாழ்க்கை கிடையாது. அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றும்படி மும்பை ரெயில்வே போலீஸ் கமிஷனர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சோனு சூட் இதற்கு பதில் அளிக்கும் போது இந்த வீடியோவிற்கு மன்னிப்பு கேட்கிறேன், ஆனால் லட்சக்கணக்கான ஏழைகள் இன்னும் ரெயில் கதவுகளுக்கு அருகில் அமர்ந்து பயணிப்பதை அனுபவிக்க விரும்புவதாக கூறினார். நாட்டின் ரெயில்வே அமைப்பை மேம்படுத்தியதற்கும் நன்றி என்றும் கூறினார்.