உலகின் விலையுயர்ந்த வைர மோதிரத்தை பரிசாக பெற்ற தமன்னா: கொடுத்தது யார் தெரியுமா?

நடிகை தமன்னா உலகின் ஐந்தாவது விலையுயர்ந்த வைர மோதிரத்தை பரிசாக பெற்றுக் கொண்டது தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது. தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் தமன்னா. அதனைத் தொடர்ந்து ஆனந்த தாண்டவம், சுறா, அயன், சிறுத்தை, பையா போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப்படங்களில் நடித்தும் தனக்கென தனி தனி மொழி ரசிகர்களை ஒன்றாக சேகரித்திருக்கிறார். இவர் தற்போது சூப்பர் ஸ்டாருடன் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதேவேளை, தமன்னாவிடம் விலையுயர்ந்த வைர மோதிரம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. விலையுயர்ந்த வைர மோதிரத்தை பரிசாக பெற்ற தமன்னா தமன்னாவிடம் இருக்கும் இந்த மோதிரம் உலகின் ஐந்தாவது பெரிய வைர மோதிரமாகும் எனவும் அந்த மோதிரத்தின் மதிப்பு 2 கோடிக்கும் மேல் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விலையுயர்ந்த வைர மோதிரத்தை ராம் சரணின் மனைவி உபாசனா காமினேனி தான் பரிசாக கொடுத்திருக்கிறார். சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்ததற்காகத்தான் தமன்னாவிற்கு இந்த மோதிரத்தை பரிசாக கொடுத்திருக்கிறார்.