சினிமா

சென்னையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட பெரும் பதற்றம்!

சென்னையில் அஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின்‛ மறக்குமா நெஞ்சம்’ என் பெயரில் இசை நிகழ்ச்சி ஒன்று நடைப்பெற்றது. திறந்தவெளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சரியான ஏற்பாடுகள் செய்யப்படாததால் ரசிகர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

குறித்த நிகழ்ச்சியில் அதிக பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் கூட நிகழ்ச்சியை சரியாகப் பார்க்க முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். ரசிகர்கள் பலர் நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்குள்ளும் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துள்ளனர். நேற்று மாலையிலிருந்தே இது தொடர்பில் ஏஆர் ரஹ்மான் ரசிகர்கள் பலர் வீடியோ, புகைப்பட ஆதாரங்களுடன் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு கடும் குற்றச்சாட்டுக்களை எழுப்பினர்.

குறிப்பாக போடப்பட்ட இருக்கைகளுக்கு அதிகமாக டிக்கெட்டுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விற்று மக்களை பெரும் அவதிக்கு உள்ளாக்கி உள்ளனர். 25 ஆயிரம் பேருக்கான நிகழ்ச்சிக்கு 40 ஆயிரம் பேருக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுக்கடங்காத கூட்டத்தால் நிகழ்ச்சியை காண வந்த மக்கள் கடும் சிரமரத்திற்குள் உள்ளாகினர். சில பெண்கள் தாங்கள் குழந்தைகளை வைத்துக் கொண்டு உயிர் பிழைத்து வந்ததே பெரிது என கூறிய வீடியோக்கள் வைரலாகின.

மேலும் குறித்த நிகழ்ச்சியால் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் சிக்கினார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பில் ஆய்வு செய்ய தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து இசை நிகழ்ச்சி நடந்த இடத்தில் தாம்பரம் பொலிஸ் ஆணையர் அமல்ராஜ் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

Back to top button