சினிமா
’வாரிசு’ பட டிரைலருக்கு குவியும் நெகடிவ் கமெண்ட்ஸ்

தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் டிரைலர் நேற்று மாலை 5 மணிக்கு வெளியானது. இந்த படத்தின் டிரைலர் வெளியான பத்தே நிமிடத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்கள் டிரைலரை பார்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எந்த அளவுக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைக்கின்றதோ அதே அளவுக்கு நெகட்டிவ் விமர்சனங்களும் இந்த டிரைலருக்கு அதிகரித்து வருகிறது
டிரைலரை பார்க்கும்போது படம் முழுக்க முழுக்க தெலுங்கு படம் மாதிரி இருக்கிறது என்றும் பஞ்ச் வசனங்கள் போலித்தனமாக இருக்கிறது என்றும் நடுநிலை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழுக்கு இந்த படம் எடுபடுமா என்பது கேள்விக்குறியே என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.