சினிமா

வீட்டிற்கு சென்று விஜயை சந்தித்த வம்சி,தில் ராஜு – வைரலாகும் புகைப்படம்!

பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித்தின் வாரிசு, துணிவு திரைப்படங்கள் இன்று வெளியாகியிருந்த நிலையில்

இரண்டு திரைப்படங்களும் பெருவாரியாக நல்ல விமர்சனத்தினை பெற்றுள்ளன.

இன்று மாலையே தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் இயக்குனர் வம்சி இருவரும் நடிகர் விஜய் வீட்டுக்கு சென்று சந்தித்து இருக்கிறார்கள்.

அங்கு விஜய்க்கு பெரிய பூங்கொத்து கொடுத்து வாரிசு வெற்றிக்காக கொண்டாடி இருக்கின்றனர். புகைப்படம் தற்போது வெளியாகி இணையதளங்களில் வைரலாகிவருகிறது.

ரசிகர்களிடம் கிடைத்து இருக்கும் ஆதரவை பார்த்து தயாரிப்பாளர் தில் ராஜு மகிழ்ச்சியாகி இருக்கிறார். அவர் இன்று தியேட்டர்களில் ரசிகர்களின் ஆதரவை நேரடியாக பார்க்க வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button