சினிமா

பிக் பாஸிலிருந்து வெளியேற யார் காரணம்? இரவு முழுதும் தூங்காமல் இருந்த பவா!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலிருந்து எழுத்தாளர் பவா செல்லத்துரை திடீரென்று வெளியறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் பிரபல ரிவியில் கடந்த ஞாயிற்று கிழமை ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன் தொகுப்பாளராக இந்த ஆண்டும் கமல்ஹாசனே இருந்து வருகின்றார். உள்ளே சென்ற முதல் நாளே 6 போட்டியாளர்கள் வேறு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். பிக்பாஸில் தலைகுனிந்த மகள் ஜோவிகாவிற்கு தந்தை ஆகாஷ் அனுப்பிய காட்சி பிக்பாஸில் தலைகுனிந்த மகள் ஜோவிகாவிற்கு தந்தை ஆகாஷ் அனுப்பிய காட்சி ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே சண்டையும், சச்சரவுமாக செல்லும் பிக்பாஸில் இன்று பவா செல்லத்துரை வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது. பிக்பாஸ் வீட்டில் இந்த வார தலைவராக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த சரவணன் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பவா செல்லத்துரை இந்த வாரமும் சின்ன வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், தலைவராக இருக்கும் சரவணன் அவரை பேசிய ஒரு வார்த்தை காரணம் என்று கூறப்படுகின்றது.

பிக்பாஸ் வீட்டில் கதை கூறிய விதத்தில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த பவா செல்லத்துரை எச்சில் துப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ளது. வனிதாவின் மகள் ஜோவிகாவிற்கு ஆதாரவாக படிப்பு அத்தியாவசியம் இல்லை என்று இவர் கூறிய கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜோவிகா பேசியதற்கு வயஙது வித்தியாசம் பார்க்காமல் கைக்கொடுத்த பவாவிற்கு ஜோவிகா கை கொடுக்காமல் மறுத்ததும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த வார தலைவர் சரவணன் பவா செல்லதுரை குறித்து பேசும்போது “சோம்பேறி” என்று குறிப்பிட்டதால், இரவு முழுவதும் தூங்காமல் இருந்துள்ளார். பின்பு டாஸ்க் எதுவும் தன்னால் செய்யமுடியாது… எல்லாம் தெரிந்தே இந்த வீட்டிற்கு வந்ததாகவும், தற்போது இந்த வீட்டில் அதிகமான வன்மங்கள் இருப்பதும், இதற்கு மேல் என்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது என்று கூறியுள்ளார். அதற்கு பிக்பாஸ் உங்களை மக்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வைப்பதற்கு விரும்புகின்றனர் என்று கூறினார். அதற்கும் பவா சம்மதிக்கவில்லையாம். பின்பு மருத்துவரை அனுப்பி வைக்கிறோம் இன்று ஒருநாள் இருந்துவிட்டு செல்ல பிக்பாஸ் கேட்டுக்கொண்டுள்ளது. மருத்துவர் வந்து பேசியும் பவா ஒத்துழைக்காததால் இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற உள்ளதாக கூறப்படுகின்றது.

Back to top button