சினிமா
தளபதி 67 இல் ஜனனி – வெளியான தகவல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67 ஆவது படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது.
இந்த திரைப்படத்தில் பிக் போஸ் நிகழ்ச்சியில் பங்குகொண்டு பிரபலமான இலங்கை பெண் ஜனனி இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து ஜனனி தரப்பில் இருந்து இதை நான் சொல்வதை விட தளபதி 67 படக்குழு சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். காத்திருங்கள் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.