சினிமா
‘பதான்’ டிரைலரை வெளியிட்டார் நடிகர் விஜய்!

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவுள்ள ‘பதான்’ திரைப்படத்தின் முன்னோட்டத்தினை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் “பதான்” இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார்.
சமீபத்தில் “பதான்” திரைப்படத்தின் முதல் பாராவை போஸ்டர், முன்னோட்டம் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது மட்டுமல்லாது இந்திய அளவில் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் அந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தினை நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார்.