தோனியின் “லெட்ஸ் கெட் மேரிட்” – நடிகர்கள் பட்டியல் வெளியானது!

மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து ‘டோனி என்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.
ஏற்கெனவே, ‘தி ரோர் ஆஃப் தி லயன்’ என்ற ஆவணப்படத்தைத் தயாரித்திருக்கும் இந்நிறுவனம் தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர்.
காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகவுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.
லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married) தோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள முதல் படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலை, மோஷன் போஸ்டர் வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் நடிகை நதியா, ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்திற்கு லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married) என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.