பிக்பாஸ் கவினுக்கு ஜாேடியாகும் நயன்தாரா..!

பிரபல தொலைக்காட்சியில் கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி அதன் பின் படிப்படியாக அடுத்தடுத்து சில சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அதிலும் அவர் நடித்த சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் கதாப்பாத்திரம் இவரை இன்னும் பிரபலமாக்கியது. சீரியலில் பிரபலமாகியப் பின் வெள்ளித்திரையில் ஜொலிக்க வேண்டும் என்று சில படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்தார்.
பின்னர் தான் நட்புன்னா என்னானு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் எதிர்ப்பார்த்த அளவில் வெற்றிப் பெறாத காரணத்தால் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பிறகு “லிஃப்ட்” என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார்.இந்த படத்தின் மூலம் தனக்கொன ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார். இந்த படத்தின் பின்னர் ரசிகர்கள் மத்தியில் கவினுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனை தொடர்ந்து, அதே தயாரிப்பு நிறுவனம் கவினை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது.